மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'லூசிஃபர்'. இப்படம் தற்போது தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற தலைப்பில் ரீமேக்காகி வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவி நடிக்க கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் சிரஞ்சீவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் 'காட்ஃபாதர்' படத்தின் நயன்தாரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் சத்யப்ரியா ஜெய்தேவ் என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதனை மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து போஸ்டரை பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 'லூசிஃபர்' படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தை 'காட்ஃபாதர்' படத்தில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மலையாளத்தில் 'லூசிஃபர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
Our Sathyapriya Jaidev of #Godfather pic.twitter.com/kqUY7aVKgl
— Mohan Raja (@jayam_mohanraja) September 8, 2022