பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடைச் சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு இருவரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு தற்போது வெளியில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.3.2022) விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.