Skip to main content

மஞ்சு வாரியருக்கு நற்சான்றிதழ் வழங்கியது மத்திய அரசு 

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Central government recognition Manju Warrior honest tax payer

 

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

 

இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரை மத்திய அரசு பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆண்டுதோறும் நேர்மையாக வரி செலுத்துபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021 -2022 ஆம் ஆண்டுக்கான வரியை முறையாக காட்டியதால் நடிகை மஞ்சு வாரியாருக்கு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் காரில் பறக்கும் படை சோதனை!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Popular actress car flying force test

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் லால்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் அந்த வழியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகை மஞ்சு வாரியர் வந்துள்ளார். அப்போது அவர் வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதே சமயம் மஞ்சு வாரியரைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.