அட்லி விஜய்யும் இணைந்து மூன்றாவது முறையாக பணிபுரியும் படம் பிகில். இதில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்க அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கடைசி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்கிற பாடல் லீக் ஆனதை தொடர்ந்து படக்குழு யூ-ட்யூபில் வெளியிட்டது.
அண்மையில் இப்படத்தில் நடித்து வந்த கதிர், தனது ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு ட்விட்டர் பதிவு ஒன்றை போட்டார்.
இந்நிலையில் விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு விஜய் தன்னுடன் பணியாற்றிய பிகில் படக்குழுவினர் 400 பேருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்தார். தற்போது 95 சதவீத பிகில் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாகவும், விஜய் தற்போது டப்பிங்கை தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 130 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு முன்னமே அறிவித்திருந்த நிலையில் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று கைதி படக்குழு அறிவித்துள்ளது. கைதி படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ்தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.