Skip to main content

லாஸ்லியா வீட்டில் சோகம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020
losliya

 

 

பிக்பாஸ் சீஸன் 3 போட்டியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் தற்போது ஹர்பஜன் சிங்குடன் ஃப்ரண்ட்ஷிப் என்னும் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

இதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது. சமீபத்தில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.

 

இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வரும் லாஸ்லியாவின் தந்தை மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் லாஸ்லியாவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்ஷன், லாஸ்லியா இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

Announcement of the release date film starring Darshan and Laslia

 

‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  யோகி பாபு, பூவையார், மனோபாலா, ‘பிளாக்’ பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 

 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 6-ஆம் தேதி ‘கூகுள் குட்டப்பா’ படம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

 

 

Next Story

வடசென்னை பட நடிகருடன் இணைந்த லாஸ்லியா

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Losliya Mariyanesan act with Hari Krishnan annapurani movie

 

இயக்குநர் லயோனல் ஜோசுவா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'அண்ணபூர்ணி'. ஹரி கிருஷ்ணன் வடசென்னை, மெட்ராஸ், கபாலி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 'அண்ணபூர்ணி'படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ஹரி பாஸ்கர் மற்றும் நேதாஜி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

த்ரில்லர் ட்ராமா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பணிகளை முடித்து திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.