இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை சுஜா வருணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியில் நுழைந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடித்து வந்த சுஜா வருணி தனது நண்பரும் நீண்ட நாள் காதலருமான சிவாஜி தேவ் என்ற சிவக்குமாரை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி சுஜா வருணி திருமணம் செய்துக் கொண்டார். நடிகர் சிவக்குமார் சிவாஜியின் பேரன் ஆவார்.
சுஜா வருணி-சிவக்குமார் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.