Skip to main content

''பார்த்திபன் என் பக்கம் வந்தாலே போ என விரட்டிவிடுவேன்'' - பாரதிராஜா  

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாரதிராஜா பார்த்திபன் குறித்து பேசியபோது....

 

bharthiraja

 

 

''தாவணி கனவுகள் படத்தின் ஒரு பாடலை நான் பாக்யராஜிக்காக இயங்கிக்கொண்டிருந்த சமயம் அந்த படத்தில் உதவி இயக்குனராக பார்த்திபன் வேலை செய்துகொண்டிருந்தார். அவர் எப்போதும் ஒவ்வொரு ஷாட்டுக்கு நடுவிலும் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி முன்னாடி வந்து நிற்பார். நானும் போ என்று விரட்டி விடுவேன். பிறகு ஒரு நாள் என்னிடம் வந்து நான் ஒரு பண்ணிருக்கேன் என சொல்லி புதிய பாதை பட அழைப்பிதழை கொடுத்தார். நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தேன். உடனே நான் அதில் ஹீரோவாக நடித்திருக்கேன் சார் என்றார். நானும், நீ நடித்திருக்கின்றாயா என மீண்டும் ஆச்சர்யப்பட்டேன். நான் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று கூறுபவன். இருந்தாலும் பார்த்திபன் இப்படி சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவனுக்கு என்ன தைரியம் இருந்தால் நடிப்பான் என்று நினைத்தேன். பின் புதிய பாதை ரிலீசாகி நான் நினைத்ததை சுக்குநூறாக உடைத்தது. பார்த்திபன் நடிப்பில் பல்வேறு பரிமாணங்கள் இருக்கிறது. தமிழ் சினிமா பார்த்திபனை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவில்லை. பார்த்திபன் இருக்கவேண்டிய உயரம் வேறு'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்