
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் "அரபிக் குத்து" என தொடங்கும் இப்பாடல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வித்தியாசமான காமெடி கலந்த இந்த ப்ரோமோ வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத், மற்றும் படத்தின் இயக்குநர் நெல்சன் ஆகியோருடன் போனில் உரையாடும் விஜய், "உங்களை எல்லாம் நம்ப முடியாது" என கூறுவது பலரையும் ரசிக்கும்படி வைத்துள்ளது.