
சென்னையை அடுத்துள்ள பையனூரில் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக் காலத்தில் திரைப்படத்துறையினருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. இருப்பினும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அங்கு வீடுகள் கட்டாததால் அதற்கான அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து திரைத்துறையினர் மீண்டும் அந்த அரசாணையைப் புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (21.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னதிரை நடிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற விதத்தில் குத்தகைக்கு 99 ஆண்டுகளுக்குக் கலைஞரால் வழங்கப்பட்டது.
அரசாணைப்படி அந்த இடத்தில் 3 ஆண்டுகளுக்குள் கட்டிடங்களைக் கட்டி பயன்படுத்த வேண்டும். ஆனால் அதில் சிறிது காலதாமதம் ஆகிவிட்டது. ஆகவே இந்த ஆட்சி அமைந்த உடன் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினையும், என்னையும் சந்தித்து இதனைப் புதுப்பித்துத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தனர். அந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தை அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த கோரிக்கையை ஏற்று அரசாணை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
கலைஞர் குத்தகைக்கு வழங்கிய 90 ஏக்கர் இடத்தில் இன்றைய மார்க்கெட் மதிப்பு 180 கோடி ரூபாய் ஆகும். ஆனால் அதே இடத்தை திரைப்படத்துறையினரின் நலன் கருதி மீண்டும் திரைப்படத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட அரசாணை வழங்கப்பட்டுள்ளது இதில் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அடுக்குமாடி இருப்ப கூடிய பிள்ளை கட்டிக்கொள்ள 8 தெரிவித்துக் கொள்கிறேன் புதுப்பிக்கப்பட அரசாணை மூலம் இடத்தினை பெற்ற திரைத்துறை சங்கத்தினருக்குப் பாராட்டுகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.