கோலா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பாக்கியராஜ் தனக்கு தெரிந்த போலீஸ்காரர்களை பற்றி பேசினார். அப்போது அவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரர்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், “போலீஸ்காரர்கள் என்றாலே பல விதத்தில் இருப்பார்கள். எனக்கு நிறைய போலீஸ்கார நண்பர்கள் உண்டு. ஒரு சில போலீஸ்காரர்கள், தப்புசெய்து போலீஸிடம் மாட்டிக்கொண்டுவிட்டு பின்னர் அவரை தெரியும் இவரை தெரியும் என்று சிபாரிசு கொண்டுவந்தால். பலார் என அவன் பேச தொடங்கும் முன்பே அடித்துவிடுவார்கள். மீண்டும் அவன் எம்.எல்.ஏ என்று சொல்ல தொடங்கினால் அடிதான். அதன்பின் மாட்டிக்கொண்டவனை மீட்க வரும் அந்த பெரிய ஆள் அங்கு வந்தவுடன். அந்த போலீஸ்காரர் ஏண்டா அண்ணனுக்கு தெரிஞ்சவன் சொல்ல மாட்டியா என்று மீண்டும் இரண்டு மூன்று தடவை அடித்துவிடுவார்கள். இதுபோல போலீஸ்காரர்கள் டெக்னிக்காக அடிக்க கூடியவர்கள்” என்று கூறினார்.
இதனை அடுத்து, “ஒருவர் தனக்கு ஆள் பலம், அதிகார பலம் இருக்கிறது என்று போலீஸ்காரர் ஒருவருக்கு அதிகமாக சிரமம் கொடுத்து வந்திருக்கிறார். அந்த போலீஸும் இவனுக்கு பலம் அதிகமாக இருக்கிறது. இவனை ஒன்று செய்ய முடியாது இப்போதைக்கு என்று பொறுமையாக காத்திருந்திருக்கிறார். அந்த சமயத்தில் எமர்ஜென்சி வர, போலீஸ்காரர் தனக்கு தொல்லை கொடுத்த நபரை அடிக்காமல், உதைக்காமல் அழகாக கொண்டுவந்து சிறையில் அடைத்துவிட்டார். பின்னர், தொழுநோயினால் பாதிக்கப்பட்டவரிடம் பிரியாணியை சிறையில் இருக்கும் அந்த நபருக்கு ஊட்ட சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். இதைகேட்டு பயந்து அந்த சிறைக்குள்ளேயே கெஞ்சி இருக்கிறார் போலீஸுக்கு தொல்லை கொடுத்தவர். பின்னர், போலீஸூம் என்னை பார்த்தால் உனக்கு என்ன இழிச்சவாயன் போல தெரிகிறதா என்று மிரட்டி விடுதலை செய்துவிட்டார் “ என்று வேறொரு டெக்னிக்கில் தண்டிக்கும் போலீஸ்காரரை பற்றி சொன்னார்.
கடைசியகா மனிதாபிமானமாகவும் போலீஸ்காரர்கள் இருப்பார்கள் என்பதற்கும் ஒரு நிகழ்வை சொன்னார். “ ஒருவன் டிராஃபிக்கில் மிகவும் வேகமாக வந்திருக்கிறான். அவனை ஒருவர் மடக்கி பிடிக்கிறார். அவன் அவரிடம் மனைவி பிரசவ வலியில் துடிக்கிறார்கள். போன் வந்தது அதனால்தான் வேகமாக சென்றுகொண்டிருக்கிறேன் என்கிறான். அவர் சரி பொறு என்று ஃபைன் டிக்கெட் போட்டு, அப்புறமாக கட்டு என்று சொல்லிவிட்டு அனுப்புகிறார். அதே வழியில் மீண்டும் வேகமாக ஓட்டி போலீஸிடம் மாட்டிக்கொண்ட அந்த நபர் வருகிறார். அப்போதும் அதே போலீஸ்காரர் மடக்குகிறார். இந்தமுறை நான் வேகமாகவே வரவில்லையே என்னை ஏன் இவர் பிடிக்கிறார் என்று டென்ஷனாக போலீஸை நோக்கி செல்கிறார். போலீஸ் அவரிடம் அன்றைக்கு மனைவி பிரசவ வலியில் துடிக்கிறாள் என்று சொன்னியே என்ன ஆகியது. மனைவி குழந்தை நலமா என்று மனிதாபிமானத்துடன் விசாரித்துள்ளார். இப்படியும் மனிதாபிமானத்துடனும் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்” என்று பாக்கியராஜ் அந்த விழாவில் பேசியிருந்தார்.