Skip to main content

மிரட்டும் அவதார் 2 புகைப்படங்கள்...

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்தை தொடர்ந்து அவதார் படத்தை பல வருட தயாரிப்புக்கு பின் எடுத்தார் ஜேம்ஸ். இத்தனை வருட காத்திருப்பிற்கு கிடைத்த பரிசு உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை. சுமார் 2.7 பில்லியன் டாலர் சம்பாதித்தது. தற்போது இந்த வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் முறியடித்து அவதாரை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.
 

avatar 2

 

 

இந்நிலையில் அவதார் படத்தில் மேலும் நான்கு பாகங்களை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக 2010ஆம் ஆண்டு அறிவிப்பு செய்தது. இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் 2014, 2015ஆம் ஆண்டு வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொழில்நுட்ப வசதிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருப்பதால் இன்னும் தாமதமாகும் என்று அறிவித்தார்கள்.  
 
இதனையடுத்து 2016ஆம் ஆண்டில் 2018, 2020, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. பின்னர், ஒரு நேர்காணலில் பேசிய ஜேம்ஸ் கேமரூன் 2018ஆம் ஆண்டும் அவதாரை வெளியிட சாத்தியமற்றது என்று தெரிவித்தார். அதன்பின்னர் இப்படத்தை தயாரித்து வந்த ஃபாக்ஸ் நிறுவனம், அவதார் 2 முதல் 5ஆம் பாகம் வரையிலான ரிலீஸ் தேதிகளை போஸ்டர் வடிவில் வெளியிட்டது. அவதார் 2 டிசம். 18, 2020; 3ஆம் பாகம் டிசம். 17, 2021; 4ஆம் பாகம் டிசம். 20, 2024;  5ஆம் பாகம் டிசம். 19, 2025 என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
 


நியூசிலாந்தில் உருவாகிவரும் இப்படத்தின் ரிலீஸ் தேதிகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவதார் 2 ஒருவருடம் தள்ளிப்போய் 2021 டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.அவதார் 3 - 22 டிசம்பர் 2023, அவதார் 4 - 19 டிசம்பர் 2025, அவதார் 5 - 18 டிசம்பர் 2027 ஆகிய தேதிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவதார் படக்குழு, 2ஆம் பாகத்திலிருந்து பண்டோரா என்னும் அவதார்கள் வாழும் உலகம் எப்படி இருக்கும் என்று நான்கு ஓவியங்களை ஸ்னீக் பீக்காக வெளியிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்