![Ashwin Kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/F58f38psxOxobkroj_6Hypj95BZoJC0WwW8KkFy487c/1631946811/sites/default/files/inline-images/28_13.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிரபு சாலமன் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் அஷ்வின் நாயகனாக நடிக்க உள்ளார். கதாநாயகி பாத்திரம் இல்லாத இப்படத்தில் நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்ததாக பிரபு சாலமனின் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் ‘ஓ மணப்பெண்ணே’ படத்திலும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.