'பாகுபலி' படங்கள் மூலம் உலகளவில் புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் சாஹோ படத்திற்குப் பிறகு மீண்டும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 'ஜான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சாவித்திரி வாழ்க்கை படமான 'மஹாநதி' (நடிகையர் திலகம்) படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் சைன்டிஃபிக் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகத் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அரவிந்த் சாமி ஏற்கனவே தனி ஒருவன் தெலுங்கு பதிப்பான 'துருவா' படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.