Skip to main content

சர்வதேச திரைப்பட விழாவில் ஏ.ஆர் ரகுமான், நயன்தாரா...

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

AR Raghuvan, Nayanthara at the International Film Festival ...

 

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும். உலகில் மிகுந்த செல்வாக்கும், மதிப்பும் உள்ள இந்த விழா 1946-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வரை ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்று வருகிறது. பதினொரு நாள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்பட்டு வருகின்றன. 75-வது ஆண்டிற்கான 'கேன்ஸ் திரைப்பட விழா 2022' விழா மே 17-ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி நிறைவடைகிறது. பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் இந்த விழாவில் நடுவர்களில் ஒருவராக கலந்துகொள்கிறார்.  

 

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் திரைத்துறையை சார்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அந்த குழுவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், நவாஸூதீன் சித்திக், கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, நடிகர் மாதவன், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் உள்ளனர். மேலும் இவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. 

 

இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கியுள்ள 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படம் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் ட்ரைலரும் திரையிடப்படவுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்