கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'வானவில்' தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தொடர்ந்து ரஜினிகாந்த், தனுஷ், ஜோதிகா, விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் #MeToo வில் பாலியல் புகார் கூறியுள்ளார். அதில்...
"நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். அவரை 2016ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 18. மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம். ஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார். என்மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினார். மெதுவாக எனது நண்பர்களை துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார். எனது பெற்றோர்களையும் ஒதுக்க செய்தார். நான் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன். என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார். என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண விஷயமானது. ஒரு கட்டத்தில் தவறாக சிக்கியதை உணர்ந்தேன். பிறகு அதில் இருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்" என்று கூறி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.