
நடிகர்கள் அமீர் கான், கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹந்தோஸ்தான் படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விரைவாக நடைபெறுவதால் சில மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து இரவில் தூக்கமில்லாமல் கலந்து கொண்டு வருகிறார் அமிதாப். இந்நிலையில் அவர் ஒரு போர்க்கள காட்சியில் நடித்து கொண்டிருக்கும்போது தனது வலது தோள்பட்டை கடுமையாக வலிப்பதாக கூறி மயங்கினார். இதையடுத்து உடனடியாக அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு அமிதாப் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மும்பையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் ஜெய்ப்பூருக்கு விரைந்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, தோள்பட்டை வலியில் இருந்து அமிதாப்பச்சன் விடுபட்டார். பின்னர் அவரது உடல்நிலை, மருத்துவ ரீதியாக தகுதியாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்தனர். மேலும் உடல்நிலை முன்னேறி வந்தாலும், அமிதாப் பச்சன் முறையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.