எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 'ஏகே 61' படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் பாலிவுட் நடிகை தபு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் ஒன்று வெளியகியுள்ளது. அதன்படி ஏகே 61 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் வெற்றிமாறன் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.