அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் (விண்வெளி ஆராய்ச்சி) பிரிவில் ஆளில்லாத சிறிய ரக விமானங்களை (drone) வடிவமைக்கும் 'தக்ஷா' என்ற மாணவர் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகர்களாக இருந்து வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்படும் ஊதியத்தை பல்கலைக்கழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்துள்ளார். 'தக்ஷா' மாணவர் குழு தொடர்ந்து மாநில அளவிலான சிறிய ரக விமான (ட்ரான்) தயாரிப்பில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய பயணிகள் விமான சேவை துறை சார்பாக ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரான்) தயாரிப்பதற்கு 'தக்ஷா' தேர்வாகியுள்ளது. இந்திய முழுவதும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரான்) தயாரிப்பதற்கு 5 நிறுவனங்கள் தெரிவாகியுள்ளது. அதில் ஒன்றாக அஜித் வழிநடத்தும் தக்ஷா மாணவர் குழு தேர்வாகியுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்து உள்ளது. மேலும் இதற்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்