Published on 09/11/2018 | Edited on 09/11/2018

அஜித் அடுத்ததாக ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து, எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் அஜித் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் வரலாற்று கதை ஒன்றில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. மேலும் இப்படத்தை குலேபகாவலி, அறம் ஆகிய படங்களை தயாரித்த கே ஜி ஆர் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் விரைவில் அதிரகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.