
இசை காப்புரிமை தொடர்பாக கிரியா சட்டம்(Kria Law) நிறுவனம் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு அரங்கத்தில் கருத்தரங்கம் நடத்துகிறது. ‘MUSIC AND IP: FEEL THE BEAT OF IP’ என்ற தலைப்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இசைத்துறையில் பயணிக்கும் முக்கியமான நபர்கள் கலந்து கொண்டு காப்புரிமை இசைத் துறையில் எந்தளவு இருக்கிறது என்பது குறித்து விரிவாக பேசவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக கிரியா நிறுவனத்தின் உரிமையாளர் பரத், “ஒரு பாடல் பலரால் உருவாக்கப்படுகிறது. முதலில் தயாரிப்பாளர் தான் இசையமைப்பாளரை அணுகி எனக்கு ஒரு ஜானரை குறிப்பிட்டு இது மாதிரி பாட்டு வேண்டும் என சொல்லுவார். பின்பு அதற்காக ஒரு டியூன் இசையமைப்பாளர் போடுவார். அந்த டியூனுக்காக எழுத்தாளர் வரிகள் எழுதுவார். பின்பு அது ரெக்கர்ட் செய்ய ஸ்டூடியோ செல்வார்கள். அங்கு பியனோ, கீ போர்ட் வாசிப்பவர்கள் இருப்பார்கள்.
இப்படித்தான் ஒரு பாடல் உருவாகிறது. ஒரு பாடல் உருவாக இத்தனை பேர் தேவைபடுகிறர்கள். இதில் எல்லோருக்குமே காப்புரிமை உண்டு. ஆனால் இவர்கள் எல்லோருமே அவரவர் வேலைகளை செய்து படத்தின் தயாரிப்பாளரிடம் தான் கொடுப்பார்கள். அதனால் அவர்தான் ஓனர். அதே சமயம் இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர் என அனைவருக்கும் அவரவர் விஷயத்தில் ராயல்டி கொடுக்க வேண்டும்” என்றார்.