Skip to main content

முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினி வாழ்த்து

Published on 01/03/2025 | Edited on 01/03/2025
rajini birthday wishes mk stalin

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2025) தனது 72வது பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும் முதல்வருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் கமல் நேற்றே முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென நேரில் சந்தித்து வாழ்த்தினேன். 

தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ரஜினி தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்