Skip to main content

விஜய் பிறந்தநாள் அன்று போட்டிப்போடும் அஜித் ரசிகர்கள்...

Published on 22/06/2019 | Edited on 22/06/2019

நடிகர் விஜய்யின் 45வது பிறந்தநாள் இன்று, இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் #HBDEminentVijay என்ற ஹேஸ்டேகை ட்ரெண்ட் செய்தனர். இது மிக வைரலாகி ட்விட்டர் உலக ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. 
 

nerkonda parvai

 

 

இதனையடுத்து விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயரையும் நேற்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்திருந்தார். அறிவித்ததைபோல் ஆறு மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அந்த போஸ்டரில் வயதான விஜய் மற்றும் கால்பந்தாட்ட வீரர் போன்ற இளம் விஜய் என்று இரு தோற்றங்களில் இருக்கிறார் விஜய். முன்பே தகவல் வெளியானது போல இப்படத்திற்கு  ‘பிகில்’ என்றே பெயரிட்டுள்ளனர்.
 

இந்நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று #happybirthdayTHALAPATHY என்று விஜய் ரசிகர்கள் இந்தியளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேகுடன் போட்டிப்போடும் அளவிற்கு #என்றும்_தல என்ற ஹேஸ்டேகை இந்தியளவில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்