Skip to main content

'ஏ.ஆர் ரஹ்மான் என் மாமா இல்ல...குரு..!' - பிரபல இசையமைப்பாளர் பெருமிதம்

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
kaashif

 

போஃப்டா சார்பில் ஜி.தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்து, ஜோதிகா - ராதாமோகன் கூட்டணியில் உருவாகும் 'காற்றின் மொழி' படத்தின் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் இசைமைப்பாளர் ஏ.எச்.காஷிஃப் இப்பட அனுபவம் குறித்து பேசும்போது...

 

"காற்றின் மொழி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமா ஏ.ஆர் ரஹ்மானிடம் இன்டர்ன்ஷிப் செய்தேன். பல படங்களில் அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் பாடல்களை யு டியூபில் பதிவேற்றினேன். அப்போதுதான் தனஞ்செயன் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். அப்படிதான் இந்த பயணம் தொடங்கியது.  ஹிந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ தான் ‘காற்றின் மொழி’. ரசிகர்களிடையே வெற்றிப் பெற்ற பாடல்கள் தான் இதில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் ஒரு முறை தான் அப்பாடல்களைக் கேட்டேன். ஆனால், அதன்பிறகு பெரிதாக அதைப்பற்றி சிந்திக்கவில்லை. ராதாமோகனுடன் இணைந்து இசையமைக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னணி இசையைப் பொறுத்தவரையில் படத்தின் முதல்பாதி மிகவும் சுலபமாக முடிந்துவிட்டது. இரண்டாம் பாதியில் பல காட்சிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால், தரமான இசையைத் தரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். ஆகையால், அதன் பணி தற்போது தான் நடந்து வருகிறது.

 

 

 

இப்படம் எளிமையான வாழ்க்கை, அதில் இருக்கும் உணர்ச்சிகரமான சம்பங்கள் போன்ற கதைக்கருக்கேற்ப இசை அமைந்திருக்கும். இப்படத்தின் சிறப்பைப் பற்றிக் கூறவேண்டுமானால், கதைக்கு என்ன தேவையோ,  ராதாமோகன் என்ன எதிர்பார்த்தாரோ அதை அப்படியே கொடுத்திருக்கிறேன். முதல் பாடல் மதன் கார்க்கியுடன் இணைந்து  ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடலை இசையமைத்து முடித்தோம். இப்பாடல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அடுத்து ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’, பாடல் ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எவற்றையெல்லாம் பார்த்து ரசிப்பாள் என்பதை பற்றி சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாக அமைந்திருக்கும். இயக்குநர் ராதாமோகன் முதலிலேயே கூறிவிட்டார், அப்பாடல் தான் இப்படத்தின் அடித்தளம் என்று. ஆகையால், அதை மனதில் வைத்து அந்தப் பாடலின் இசையாகட்டும், வரிகள் ஆகட்டும் இயக்குநர் கூறியபடிதான் இருக்கும். இன்னொரு சிறப்பு பாடல்‘றெக்கைத் துளிர்த்த பச்சைக்கிளி. இப்பாட்டின் உள்ளே படத்தின் மையக்கருவைக் கொண்டிருக்கும். பாடலைப் பார்க்கும்போது அதை நன்றாக உணரலாம். அடுத்ததாக இந்த படத்தின் க்ளைமாக்ஸ் மட்டுமல்லாமல் முழுப் படத்தின் கதையையுமே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ‘போ உறவே’ பாடல் தான். இருப்பினும், ‘கௌம்பிட்டாளே விஜயலட்சுமி’ பாடல் தான் படத்தின் அடையாளமாக இருக்கும்.

 

 

 

பாடல்களை இசையமைத்து முடித்ததும் முதலில் எனது பாட்டியிடம் கொடுத்தேன், அடுத்து எனது மாமா ஏ.ஆர் ரஹ்மானிடம் தான் கொடுத்தேன். மாமா என்ற உறவைத் தாண்டி அவர் பள்ளியில் பயின்றதால் அவர் எனக்கு குரு. ஆனால், பாடல்களை அவர் கேட்டாரா என்று தெரியவில்லை. மேலும், இப்படத்திற்கு புதுமுகமான என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தனஞ்செயனுக்கும், ராதாமோகனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜோதிகா பாடல்களைக் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். இதுவரை எனது மாமா ஏ.ஆர் ரஹ்மானிடம் தவிர யாரிடமும் பணியாற்றியதில்லை. யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை. அவருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே போதும். அவருடைய ஆன்மீகப் பாதையில் யாராலும் பயணிக்க இயலாது. அதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். அவருடன் பணியாற்றி அனுபவம் மிகப் பெரியது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென இயக்குனராக மாறிய பிரபல தயாரிப்பாளர்! 

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

இரண்டு முறை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ், நந்திதா நடிக்கும் கபடதாரி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு புதிய படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் முதல்முறையாக இயக்கவும் உள்ளார்.

 

dhana

 

 

சமீபத்தில் இதுகுறித்து அவர் பேசும்போது.... ''நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது, அந்த படங்களின் கதை விவாதங்களிலும், திரைக்கதை உருவாக்கத்திலும் இணைந்து பணியாற்றினேன். அதில் கிடைத்த அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்று தந்தன. எனக்குள் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு சரியான நேரம் இப்போதுதான் அமைந்து இருக்கிறது. கடந்த நான்கு மாதங்களாக நானும், என் குழுவினரும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தோம். சில நடிகர்களிடமும், தொழில்நுட்ப கலைஞர்களிடமும் என் கதையை சொன்னபோது, அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். என் இயக்கத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறேன். இது ஒரு திகில் படமாகும். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

 

Next Story

'நடிகர்கள் பாடுவதற்கு முறையான பயிற்சி அவசியம்' - ஏ.ஆர் ரஹ்மான் அட்வைஸ் 

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
ar rahman

 

 

சர்கார் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் நடுவராக ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர்கள் சொந்த குரலில் பாடுவது குறித்து பேசியபோது.... "திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக பிசியாக இருக்கிறார்கள். ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றி தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.