Published on 13/03/2018 | Edited on 14/03/2018

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் சார்லி சாப்ளின் 2. கடந்த 2002ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் படத்தை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையொட்டி இதன் இரண்டாம் பாகம் சார்லி சாப்ளின் 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதன் முதல் பாகத்தில் இணைந்த ஷக்தி சிதம்பரம், பிரபு தேவா, பிரபு மூவர் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் இதில் நிக்கி கல்ராணி, அடா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை நடிகை அடா ஷர்மா தன் சொந்த குரலில் பாடியிருக்கிறார். அடா ஷர்மா பாடியுள்ள முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.