![actor shiva rajkumar joined in dhanush captain miller](http://image.nakkheeran.in/cdn/farfuture/TErVIPKouXdKSTyvDJOwI7iuAgz94orTurvLcUWvtn0/1670501402/sites/default/files/inline-images/37_33.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/69RkxUOXaT9Usf8b_d-6HKjzvxyRptBKJHoEFHho06Q/1670500925/sites/default/files/inline-images/500x300_30.jpg)
இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில் அவரும் ஒரு பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். இருப்பினும் படக்குழுவிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சிவராஜ்குமார் தற்போது தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான 'வஜ்ரகாய' படத்தில் தனுஷ் 'நோ ப்ராப்ளம்' என்ற பாடலைப் பாடியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.