இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.

நடிகை அபிராமி நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெளியேறியவுடன் படத்தை பார்த்துவிட்டு, ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்திருந்தார். பின்னர், தனக்கு இத்தனை வாரங்களாக வாக்களித்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க செய்த ரசிகர்களுக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார்.
இதனையடுத்து நடிகை அபிராமி, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்ஷி அகர்வாலையும் சந்தித்தார்.
அவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணனும் சாண்டி குடும்பத்தை நேரில் சென்று சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.