
நீண்ட நாட்களாக இயக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் நாயகனாக நடிக்கவுள்ளார். 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ஆரவ் அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் ஆரவ் தற்போது 'ராஜ பீமா' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.