Skip to main content

70வது தேசிய திரைப்பட விருதுகள் - பட்டியல் விவரம்  

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
70th national award winners list

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 70வது தேசிய திரைப்பட விருதுகளின் பட்டியல் விவரங்கள்.

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1
சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2
சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளக்கா
சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எஃப் 2
சிறந்த இந்தி திரைப்படம் - குல்மோஹர் 
சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)
சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா 
சிறந்த துணை நடிகை - நீனா குப்தா 
சிறந்த துணை நடிகர் - பவன் மல்ஹோத்ரா
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (கே.ஜி.எஃப் 2)
சிறந்த நடன இயக்குநர் - ஜானி, சதீஷ் (‘மேகம் கருக்காதா...’ - திருச்சிற்றம்பலம்)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1), ப்ரிதம் (பிரம்மாஸ்திரா)
சிறந்த படத்தொகுப்பு - மகேஷ் புவனேந்த் (ஆட்டம்)
சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த திரைக்கதை - ஆட்டம் (மலையாளம்)
சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த பாடகி - பாம்பே ஜெயஸ்ரீ ( ‘சாயும் வெயில்...’ - சவுதி வெள்ளக்கா)
சிறந்த பாடகர் - அர்ஜித் சிங் ( ‘கேசரியா...’ - பிரம்மாஸ்திரா)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீ பத் (மல்லிகபுரம்)
சிறந்த இயக்குநர் - சூரஜ் பர்ஜாத்யா
சிறந்த திரைப்படம் - ஆட்டம் (மலையாளம்) 
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா (கன்னடம்)

சார்ந்த செய்திகள்