Skip to main content

விடுதலை 2; வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த படக்குழுவினர்

Published on 30/12/2024 | Edited on 30/12/2024

 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக ட்ரைலரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் சினிமாவை தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் கவனம் ஈர்த்தது. 

பலரது எதிர்பார்ப்பை தாண்டி கடந்த 20ஆம் தேதி இப்படம் வெளியானது. முதல் பாகத்தில் பல்வேறு உண்மை சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் ஒன்று சேர்த்து இயக்கியிருந்த வெற்றிமாறன் இந்தப் படத்திலும் அதை தொடர்ந்திருக்கிறார். இந்தப் படத்தில் வாத்தியார் கதாபாத்திரம் எதற்காக பொது வாழ்க்கைக்கு வந்தார், பின்பு ஏன் ஆயுதம் ஏந்திய போராட்டத்துக்கு மாறினார், அதன் பிறகு அவர் என்ன ஆனார்... என பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் படம் பதிலளிக்கிறது. 

இப்படத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பி.சி.ஸ்ரீராம், மாரி செல்வராஜ், ராஜு முருகன் உள்ளிட்ட பலர் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் படக்குழு படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார், பெரிய மாலை மற்றும் பூங்கொத்து ஆகியவற்றை வெற்றிமாறனுக்கு கொடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்