
‘1982 அன்பரசின் காதல்’ என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை புதுமுக இயக்குநரான உல்லாஷ் சங்கர் இயக்குகிறார்.
படத்தைப் பற்றி கூறுகையில், “கதையின் நாயகனான அன்பரசு ஒரு பெண்ணை மூன்று வருடமாய் காதலிக்கிறான். அந்தப் பெண்ணிடம் பல முறை காதலை வெளிப்படுத்த முயல்கிறான். அவனால் வெளிப்படுத்த இயலவில்லை. இதை அறிந்த நண்பர்கள் அன்பரசை கிண்டலும், கேலியும் செய்கின்றனர். மனம் தளராத அன்பரசு, காதலி இருக்கும் கேரளாவிற்குச் சென்று அவளிடம் காதலை கூற முற்படுகையில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெறுகிறது.
அதிர்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும் அன்பரசு அவளிடம் தன் காதலை சொன்னானா? என்பதைக் கதைக்களமாக்கி, “நறுக்”கான வசனம் எழுதி பரபரப்பான திரைக்கதை அமைத்து எனது முதல் படமாக இதை டைரக்ட் செய்துள்ளேன்” என்று மடமடவென கூறினார் இயக்குநர். இவரும் இதில் பிரதான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவர் பல மொழி படங்களில் நிர்வாக தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.