Published on 25/02/2021 | Edited on 25/02/2021




நடிகர் அஜித், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கரோனா நெருக்கடிநிலை தளர்வுக்குப் பிறகு இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிடைக்கும் நேரத்தில், துப்பாக்கிச் சுடுதல், பைக் ரேஸ், சைக்கிளிங் ஆகிய பொழுதுபோக்குகளில் அஜித் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்காக சென்னை எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு அஜித் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த நிலையில், தன் நண்பர்களுடன் இணைந்து அஜித் சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.