Published on 08/03/2021 | Edited on 08/03/2021



சென்னை ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை மூன்றாம் பட்டாலியனில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் தமிழ்நாடு அளவிலான 46- வது ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் பிரிவில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக நடந்த போட்டியில் பங்கேற்ற நடிகர் அஜித்குமார், சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் வெள்ளி, சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (NR) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெள்ளி, தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற அஜித்தின் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.