இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கொள்ளை அடித்து உதவும் ஒரு சம்பவம் குறித்து விவரிக்கிறார்.
மும்பையில் (money in Transit) என்று சொல்லப்படும் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இது. 75 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு நிறுவனம் சம்பளம் கொடுக்க எடுத்து செல்கிறது. அந்த வண்டியை மறித்து ஒரு மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து மும்பை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்திருந்தும், யார் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரதீப் என்ற நபர் மீது சந்தேகம் எழுந்து விசாரிக்கின்றனர். விசாரணையில், கிரிஷ்மா என்ற பெண்ணின் அறிவுரையின் பேரில் இந்த கொள்ளைகள் நடந்ததாக தெரியவந்தது. கிரிஷ்மா காட்கோபரில் வசித்து வந்தார். அவருக்கு பல வாகனங்கள் மற்றும் பங்களாக்கள் இருந்தன. அந்த பகுதியில் பெரிய ஆளாக மக்கள் பலருக்கு உதவி செய்பவராக இருக்கிறார். இதனால் மும்பை போலீசார் கிரிஷ்மாவாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால், விசாரணையில், மர்ம கும்பல் நடத்திய அனைத்து கொள்ளைகளுக்கும் கிரிஷ்மாதான் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இவர், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 50 சதவீதத்தை உதவி செய்வதற்கு பயன்படுத்தினார். யாரை வைத்து கொள்ளையடித்தார்களோ அந்த கும்பலை 40 நாட்கள் கிரிஷ்மா வெளியில் விடாமல் தன் உடனேயே வைத்திருப்பார். இப்படி வித்தியாசமான முறையில் வழிப்பறி செய்து வந்திருக்கிறார். இந்த வழக்கு 'மனி இன் டிரான்சிட்' என்ற இன்சூரன்ஸ் பெயரில் மும்பையில் இருந்து எங்களுக்கு வந்தது.
இதே போல மும்பையில் 54 வயதான பேபி என்பவர் போதைப்பொருள் கடத்தலில் சிறந்து விளங்கினார். காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டிருந்ததால் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவருக்கு சில சலுகைகள் கிடைத்தது. இவர் குறிப்பாக மெட்ரோபில் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பிரபலமானவர். நார்கோட்டிக் சட்டம் வந்த பிறகு, போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது கடினம் ஆகி இவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு, மும்பை, காஜா, தூத்துக்குடி, தேனி, கம்பம், வடசென்னை போன்ற இடங்களில் அதிகமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன.
போதைப்பொருள் தொழில் எளிமையாக பணம் வந்து சேரக்கூடியது. எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டியதில்லை என்று தாதாக்கள், ரவுடிகள் இதை செய்கிறார்கள். ஆனால் இதை செய்து மாட்டிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.