நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாகத் தென் ஆப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்தநிலையில் ஒமிக்ரான் வகை கரோனா பரவி வருவதால், இந்திய அணி தென் ஆப்ரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
இந்தநிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய அணியின் தென் ஆப்ரிக்கா பயணம் இன்னும் அட்டவணையில் இருப்பதாகவும், அந்த சுற்றுப்பயணம் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களின் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும்தான் பிசிசிஐ எப்போதும் முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியுள்ள கங்குலி, வருகின்ற நாட்களில் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஹர்திக் பாண்டியா தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கங்குலி, "அவர் ஒரு நல்ல கிரிக்கெட்டர். அவர் உடல்தகுதியுடன் இல்லை. அதனால்தான் அவர் அணியில் இடம்பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்டதும் அவர் திரும்பி வருவார் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.