Skip to main content

டெஸ்டில் களமிறங்கும் குல்தீப், சகால்? - விருப்பம் தெரிவித்த விராட் கோலி!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
Kuldeep

 

 

 

இங்கிலாத்து எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றிபெற்றுள்ளது. டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வுசெய்த இந்திய அணி, தொடக்கத்தில் சொதப்பலாக ஆடினாலும், சுழற்பந்து இணையான யஸ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் வருகைக்குப் பிறகு ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. 
 

உபேஷ் யாதவ் 2 மற்றும் சகால் 1 விக்கெட் வீழ்த்த, டி20 கிரிக்கெட்டைப் போலவே இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் யாதவ்வின் சுழலில் திணறினர். 10 ஓவர்கள் வீசிய குல்தீப் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டி முடிவில் பேசிய விராட் கோலி, சகால் மற்றும் குல்தீப் யாதவை டெஸ்ட் போட்டியிஉம் களமிறக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 
 

டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட அணியில் சில மாறுதல்களை ஏற்படுத்தவுள்ளோம். அதன்படி, தற்சமயம் சிறப்பாக செயல்பட்டு வரும் குல்தீப் மற்றும் சகால் வாய்ப்பு பெறலாம். இந்த இருவரிடமும் இங்கிலாந்து வீரர்கள் திணறுவதால், அவர்களை அணியில் சேர்க்க முயற்சிப்போம் என தெரிவித்துள்ள விராட் கோலி, டி20 தொடரைப் போல அல்லாமல் ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற முயற்சிப்போம் எனவும் கூறியுள்ளார்.