சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடந்த மாதம் 28ஆம் தேதி அங்கு நடந்த மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனை படைத்தார். அதே போல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்றார். அதே போல், கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்வப்னில் குசேலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதுவரை நடந்து வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாக ஒட்டுமொத்தமாக 3 பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை வீழ்த்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (06-08-24) பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவுன் மல்யுத்த காலிறுதிப் போட்டி நடைபெற்றது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சார்பாக வினேஷ் போகத், ஜப்பான் சார்பாக யு சுசாகி ஆகியோர் போட்டியிட்டனர். உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனுமான யு சுசாகியை, 3-2 என்ற கணக்கில் வினேஷ் போகத் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற, காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார். நம்பர் 1 வீராங்கனையாகவும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றருவமான ஜப்பான் வீராங்கனையை, வினேஷ் போகத் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் 4வது பதக்கத்தை வினேஷ் போகத், உறுதி செய்துள்ளார்.
பாலியல் வழக்கில் சிக்கிய பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சிங்கை எதிர்த்து டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர் வினேஷ் போகத், தற்போது நடைபெறுகிற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் பங்கேற்கிறார்.காமன்வெல்த் போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற இவர், பிரிஜ் பூஷன் சிங்கை எதிர்த்து மத்திய அரசு இவருக்கு வழங்கிய கேல்ரத்னா விருதை திரும்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.