Skip to main content

ஆசிய உள்விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்

Published on 21/09/2017 | Edited on 21/09/2017
ஆசிய உள்விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்

5-வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 2.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதே போல் பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கேரள வீராங்கனை சித்ரா 4 நிமிடம் 27.32 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதுவரை நடந்த போட்டியில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது.

சார்ந்த செய்திகள்