Published on 24/01/2019 | Edited on 24/01/2019
பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் கால்பந்து அணியை சேர்ந்த முன்னணி வீரரான எமிலியானோ சாலா தனி விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது நடு வானில் மாயமாகியுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவரை வேல்ஸ் நாட்டை சேர்ந்த கார்டிஃப் சிட்டி கால்பந்து அணி 138 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டிற்கு இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம் மூலம் சாலா பயணித்துள்ளார். அப்போது சனல் தீவின் மேல் பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதற்கு பின் அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.