கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 5 போட்டிகளில் விளையாட தடை
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்பானீஸ் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில் நடுவருக்கும் ரொனால்டோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது நடுவரை ரொனால்டோ பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. 2 மஞ்சல் அட்டைகள் பெற்றதால் ஏற்கனவே அவரால் ஒரு போட்டியில் விளையாட முடியாத நிலையில், நடுவரை தள்ளிய விவகாரத்தில் மேலும் நான்கு போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரொனால்டோவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.