கனடா குளோபல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் புதன் கிழமையன்று டொராண்டோ நேஷனல்ஸ் மற்றும் மாண்ட்ரீல் டைகர்ஸ் அணிகள் மோதவிருந்த போட்டியில் அவ்விரு அணிகளிலுள்ள வீரர்கள் மைதானத்திற்கு வரவே மறுத்தனர்.
![yuvraj singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/q7hWeCja58Ha-TEYoOiH0if-QkpUdT6vMX2xJRvpkG4/1565258398/sites/default/files/inline-images/yuvraj-singh.jpg)
இந்த இரு அணி வீரர்களும் விடுதியிலிருந்து பேருந்தில் ஏறவே மறுத்துள்ளனர். இந்தத் திடீர் குழப்பத்துக்கும் அணி வீரர்களின் எதிர்ப்புக்கும் காரணம் வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததே. இதனால் இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் 2 மணி நேரம் தாமதமானது.
இந்த மேட்ச்சை ஒளிபரப்பு செய்த சேனல் முதல் இந்த போட்டியை நடத்தும் அமைப்பு முதல் யாரும் இந்த போட்டியின் தாமத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் என்பதால் இந்தப் பிரச்சனை மேலும் பரவலானது. இந்த போட்டியில் வென்றால்தான் அடுத்த கட்டத்திற்கு தன்னுடைய டீமை அழைத்து செல்ல முடியும். ஆனால், வீரர்களின் சம்பள பாக்கியை பெற்று தர வேண்டும் என்று யுவராஜ் களமிறக்க விருப்பமில்லாதவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த போட்டியில் விளையாடும் மற்ற அணி வீரர்களுக்கும் சம்பளம் சரியாக தரவில்லை என்று எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.