நம்மில் பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது தலைமை இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே வரக் கூடிய ஒன்றாகும் .அப்படி வர நினைப்பவர்கள் தன் கூட வேலைப் பார்க்கும் சக ஊழியரைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறோம் அது மட்டுமில்லாமல் யாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் .சரி எந்த மாதிரி பண்புகள் என்றுப் பார்க்கலாம் .ஒரு தலைவர் தன்னைப் பற்றி அறிந்துகொண்டிருந்தால் போதாது, தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது தன் குழுவினரைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்திறன்கள், நோக்கங்கள், அவர்களது தேவைகள் அவர்களது, உணர்வுகள் போன்றவற்றை தலைவர் நன்கறிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் குழுவில் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் குழு உறுப்பினரை நல்ல முறையில் செயல்பட வைக்க முடியும். செயலூக்கமுள்ள தலைவர் தன் உறுப்பினர்களது பலம், பலவீனங்களை தெரிந்துவைத்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்வதன்மூலம், அவர்களையும் செயல்திறன் மிக்க உறுப்பினராக்க முடியும். இப்படி ஒவ்வொரு உறுப்பினர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பதன்மூலம் குழுவின் தேவைகளை, திறமைகளை, குறிக்கோள்களைஅடையும் செயல்திறன்களை பலம், பலவீனங்களை, வரம்புகளை, குழுவின் முழு ஆற்றலைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். தலைவர் அறிவிக்கும் திட்டத்தை அவர் தன் குழுவினரால் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்தும் அவரால் முன்கூட்டியே கூறமுடியும். ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர் மீதும் தலைவர் அன்புணர்ச்சி கொண்டவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களுடன் தலைவருக்கு இடையறாத தொடர்பு இருக்க வேண்டுமானால், சிறந்த தகவல் தொடர்பு ஏற்பாடு அமைத்திருக்கவேண்டும். தலைவரின் கருத்துக்கள் எல்லா உறுப்பினர்களுக்கும் சென்று சேரவேண்டும்.
தொண்டர்களின் கருத்துக்கள் அவ்வாறே தலைமையை சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் குழுவில் இருக்க வேண்டும். கடிதம், சுற்றறிக்கை ஊடக வாயிலானதொடர்பு, செய்தி மடல்கள் மூலமான தொடர்பு, நேரடி கூட்டங்கள் மூலம் தொடர்பு என வலுவான தொடர்பு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் இருக்க வேண்டும்.குழு உறுப்பினர்களின் திருப்தி குழுவுக்கும் அதனை வழி நடத்தும் தலைவருக்கும் பலம் சேர்க்கும். குழு உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி பல காரணங்களால் ஏற்படுமானால் அது குழுவையும் தலைவரையும் பலவீனப்படுத்திவிடும். "திருப்தி உணர்வு'“ குழுவினரிடம் அதிகரித்தால் குழுவினரின் திறமை மீதான நம்பிக்கை தலைவரிடம் அதிகரிக்கும்.