'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற வரும், பரத நாட்டிய கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சிறு வயதில் இருந்து எல்லா போட்டிகளிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டு, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். கர்நாடக சங்கீதத்தில் எல்லோரையும் ஜாம்பவான்கள் என்று சொல்கிறோம். தமிழ் பண்பாடு மற்றும் கலைகளில் உயர்ந்த இடத்தில் இருப்பது கர்நாடக சங்கீதம். கர்நாடக இசையில் எப்படி ஜாம்பவான்கள் நிர்ணயிக்கிறார்கள் என்றால், மூன்று ஸ்தாயி பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே கர்நாடக இசையில் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
நாங்கள் நேரடியாக கச்சேரி மேடையில் பார்த்த போது, மூன்று ஸ்தாயிலில் பாடிய ஒரே நபர், பாடகர் யேசுதாஸ் அவர்கள் மட்டுமே. இப்போது அவர் எங்கிருக்கிறார்? ஏன் அவருடைய கச்சேரிகள் நடக்கவில்லை. எதுவுமே தெரியவில்லை? மூன்று ஸ்தாயி பாடத் தெரிந்தவர்கள் மட்டும் தான் ஒரு இசை ஜாம்பவான்கள் என்று கூறினால், அதில் யேசுதாஸ் மட்டும் தான் இருக்கிறார். அப்படி இருக்கும் போது, மற்றவர்கள் எல்லாம் உண்மையாகவே ஜாம்பவான்கள் தானா? என்ற கேள்வி என்னுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.
உங்களுக்கு தெரிந்தவர்களில் மூன்று ஸ்தாயில் பாடல்களை பாடுபவர்கள் யார்? என்று கேள்வி கேளுங்கள். எதை வைத்து ஒருவருக்கு ஜாம்பவான் என்று கூறி விருதுக் கொடுக்கிறார்கள். என்னுடைய 20 ஆண்டுகால இசைப் பயணத்தில் இதுவரை மேடையில் மூன்று ஸ்தாயி பாடல்களைப் பாடியவர்கள் எவரும் இல்லை. நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது, மாணவர்களுக்காகவே யேசுதாஸ் அவர்கள் மூன்று ஸ்தாயில் பாடல்களைப் பாடி காட்டியுள்ளார். அவர் மட்டும் தான் பாடி கேட்டுள்ளோம்.
கர்நாடக சங்கீதம் அழிய கூடிய நிலையில், சென்று கொண்டிருக்கிறது. ஏன் இப்போது கச்சேரிகள் நடைபெறுவது இல்லை? ஏன் கர்நாடக சங்கீத இசை வித்வான்களும், கலைஞர்களும் எங்கு போனார்கள்? என்று தெரியவில்லை. ஏன் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை? என்று தெரியவில்லை. மொழி, மதம், இனம், சாதி ஆகியவையெல்லாம் தாண்டிய தெய்வீக கலைதான் இசை. கர்நாடக இசையை எல்லோரும் பாட முடியாது. நடனமாக இருந்தாலும், பாடல்களாக இருந்தாலும், கலை என்றாலே ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று கூறுவர். அப்பேர்பட்ட வரத்தை வாங்கியிருக்கிற யேசுதாஸ் ஏன் வெளியில் வரவில்லை? என்னுடைய கேள்வி இது தான்.
பத்ம பூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றனர். இந்த விருதை எதை வைத்துக் கொடுக்கிறார்கள்? ஒரு கச்சேரி நடத்தி முடித்துவிட்டார்கள் என்று விருது வழங்கப்படுகிறதா? அல்லது ஆயிரம் கீர்த்தனைகள் தெரிந்திருக்கிறது என்பதற்காகவா? ஒருவர் ஜாம்பவான் என்பது எதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
.