இன்றைய பஞ்சாங்கம்
08-10-2023, புரட்டாசி 21, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி பகல் 10.13 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் நட்சத்திரம் பின்இரவு 02.45 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். வாக்கியப்படி ராகு- கேது பெயர்ச்சி மதியம் 03.35 மணிக்கு. இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் - பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00, மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00.
இன்றைய ராசிபலன் - 08.10.2023
மேஷம்
இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும்.
மிதுனம்
இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
கடகம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.
கன்னி
இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
துலாம்
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மகரம்
இன்று பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
மீனம்
இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.