மிதுனம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
கடகம்
இன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை தரும். செலவுகள் குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய பொருட்கள் வாங்கும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பொன் பொருள் சேரும்.