கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001
10-11-2018, ஐப்பசி 24, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. கேட்டை நட்சத்திரம் இரவு 09.59 வரை பின்பு மூலம். நாள்முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 1/2. இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மிதுனம்
இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து வேறுப்பாட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். வருமானம் பெருகும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவி ஏமாற்றத்தை அளிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.

கன்னி
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன்கள் கிட்டும்.

துலாம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பெருமை சேரும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள்.

விருச்சிகம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு
இன்று வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் பொறுமை தேவை.

மகரம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சிலருக்கு உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் கிட்டும். மன அமைதி ஏற்படும்.

கும்பம்
இன்று காலையிலே இனிய செய்தி வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். சிலருக்கு கல்வி சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். வேலையில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் பெருகும்

மீனம்
இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளும் வரவுக்கு மீறி அதிகமாக இருக்கும். வேலையில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.