Published on 02/08/2018 | Edited on 02/08/2018

கணிதத்தின் நோபல் பரிசு என வர்ணிக்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல் எனப்படும் பரிசை இந்திய வம்சாவளியில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்த அக்ஷய் வெங்கடேஷ் வென்றுள்ளார்.
இந்தியாவில் டெல்லியில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியான அக்சய் வெங்கடேஷ் அங்கு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பணியாற்றி வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் ஃபீல்ட்ஸ் மெடல் எனும் பரிசுக்கான 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேர்ந்த்தெடுப்பில் 36 வயதான அக்சய் வெங்கடேஷ் கணித துறையில் விரிவான அளவிற்கு கணிதத்தின் பல்வேறு பிரிவுகளில் மேற்கொண்ட ஆழமான பங்களிப்பிற்காக அந்த மெடலை வென்று சாதனை படைத்துள்ளார்.