Skip to main content

இலங்கை அதிபராகிறார் சஜித் பிரேமதாசா?

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

 Will Sajith Premadasa become the President of Sri Lanka?

 

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.


இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார். அதிபர் பதவியை வரும் ஜூலை 13- ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபய தன்னிடம் தெரிவித்ததாக, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டதாகவும், இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாட்டில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், கோத்தபய ராஜபக்சேவின்  பதவி விலகலைத் தொடர்ந்து வரும் ஜூலை 20 ஆம் தேதி இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

 Will Sajith Premadasa become the President of Sri Lanka?

 


இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி மேலோங்கி இருந்தது. இந்நிலையில் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கை அதிபராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்