பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கான தேர்தல் நிறைவடைந்துள்ளது.
போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி சுனாக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அப்படி நிகழ்ந்தால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு வலுப்படும் எனக் கருதப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், லிஸ்டர்ஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கும் நிலையில் இவர்களில் யார் வெற்றியாளர் என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.