ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்திலுள்ள ஒரு தார்சாலையில் சென்ற வாகனங்களின் டயர்களோடு தார் ஒட்டிக்கொண்டு வந்த சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா கூறுகையில் இந்த இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது என்பதை முதலில் நம்பவே முடியவில்லை. இதுபோன்று நிகழ்வை இதற்குமுன் பார்த்ததும் இல்லை எனக்கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கேன்ஸ் நகருக்கு தெற்கிலுள்ள அத்தர்டன் டேபிள்லேன்ட்ஸில் அருகிலுள்ள சாலையில் சென்றிக்கொண்டிருந்த வாகனங்களின் டயரோடு தார் ஒட்டிக்கொண்டு வந்துள்ளது. அந்த சாலை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டள்ளது.

வாகனஓட்டிகள் இதுபற்றி கூறுகையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களின் டயர்களில் தார்கள் உருளை உருளையாக ஒட்டிக்கொண்டு வாகனம் நகரமுடியாத அளவுக்கு சிக்கிக்கொண்டது என்றும் கடந்த சில நாட்களாக வானிலை சரியில்லை எனவும் கூறியுள்ளனர் அதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தார் ஒட்டிக்கொண்ட வாகனங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என குயின்ஸ்லாந்தின் போக்குவரத்தை மற்றும் பிரதான சாலைத்துறை தெரிவித்துள்ளது.