அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக வர்த்தக போரில் இவ்விரு நாடுகளும் இறங்கியுள்ளது. இதனை அடுத்து ஹாங்காங்கில் அமெரிக்கா தன்னுடைய போர்க்கப்பலை அங்கே நிறுத்தப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தக போரினால் உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-சீனாவின் மோதல், ஆசிய-பசிபிக் கூட்டமைப்பு நாடுகள் மத்தியிலும் பிளவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க போர்க்கப்பலான ரொனால்ட் ரீகன் ஹாங்காங் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் சீனக் கடல் பகுதி பக்கம் வந்த அமெரிக்க கப்பல் ஒன்றை, சீனாவின் கப்பல் மோதுவது போல் சென்று அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.